உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Sunday 13 May 2012

கீழக்கரை காவல் நிலையத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்:

கீழக்கரை காவல் நிலையத்தில்  இன்று (12.05.2012) மாலை 4.30 மணிக்கு காவல்துறை துணைத்தலைவர், இராமநாதபுரம் சரகம் அவர்கள் தலைமையிலும், இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை கண்கானிப்பாளர் அவர்கள் முன்னிலையிலும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் அவர்கள்  காவல்துறை துணைத்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்தார். கீழக்கரை நகரில் போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் கீழக்கரை பேரூந்து நிலையத்தில் காவல்துறை OUT-POST அமைக்க வலியுறுத்தி மனு ஒன்றை கீழக்கரை மக்கள் சார்பாக கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் H.ஹாஜா முகைதீன் அவர்கள் கொடுத்தார்கள் 



கீழக்கரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான முக்கிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மனுக்களை DIG அவர்களிடம் நேரிடையாக வழங்கினார்கள்.

Saturday 5 May 2012

கீழக்கரை நகர்மன்ற கூட்டம் - கவுன்சிலர்கள் விவாதம்:


கீழக்கரை நகராட்சி நகர்மன்ற அவசர கூட்டம் 03.05.2012 மாலை 4.00 மணிக்கு தொடங்கியது. நகர்மன்ற தலைவர் ஜனாபா ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார்.
கூட்ட பொருள் அஜந்தா நகல் 02.05.2012 இரவு 8.00 மணிக்கு கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டதை கண்டித்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். மேலும், இது போல் தவறு இனிமேல் நடக்காது. கூட்டத்துக்கு மூன்று நாட்களுக்கு முன் அஜந்தா நகல் வழங்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.
கீழக்கரை நகராட்சியின் 1 முதல் 21 வார்டு பகுதிகளுக்கும் கீழக்கரை நகராட்சியின் பொது நிதியில் 40 லட்சம் ரூபாய்க்கு அத்தியாவசிய திட்ட பணிகள் நடக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கடந்த 02.03.2012 ம் தேதி நடைபெற்ற IUDM திட்டபணி சம்மந்தமான ரூ 2 கோடி டெண்டர் நடைபெற்றதை மன்றம் அங்கிகரீத்து ஒப்புதல் வழங்கப்பட்டது.
12.04.2012 ம் தேதி IUDM தெரு விளக்கு சம்மந்தமான ரூ 50 லட்சம் டெண்டர் நடைபெற்றதில் மூன்று டெண்டெர்கள் வந்துள்ளதை மன்றம் பரீசீலனை செய்தது. இந்த டெண்டரை நிராகரித்து விட்டு மறு டெண்டர் நடத்த நகர்மன்ற தலைவர் முடிவு செய்ததை பல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து நகர்மன்ற கூட்டம் கலை கட்டியது.
20 வது வார்டு கவுன்சிலர் A.H. ஹாஜா நஜ்முதின் கூறுகையில்:
டெண்டர் விதி முறைப்படி குறைந்த தொகை பதிவு செய்துள்ள ஒப்பந்ததாதருக்கு டெண்டரை அங்கீகரிப்பது தானே நடைமுறையில் உள்ளது. ஆகவே குறைந்த ஒப்பந்தபுள்ளி பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரருக்கு டெண்டரை அனுமதிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.


21 வது கவுன்சிலர் D.ஜெயபிரகாஷ் அவர் கூறுகையில்:
      IUDM தெரு விளக்கு சம்மந்தமான டெண்டரில் 3 நிறுவனங்கள் டெண்டர் பதிவு செய்துள்ளார்கள். இதில் குறைந்த டெண்டர் பதிவு செய்துள்ள மலானி லைட்டிங்க் அன் கோ, திருநெல்வேலி கடந்த 2010-2011 ஆம் வருடம் பதிவு செய்துள்ளார்கள். இவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் டெண்டர் போடுவதற்கு டெக்னிக்கல் தகுதி இல்லை. அடுத்த படியாக அதிக அளவு தொகை பதிவு செய்துள்ள நம்புராமலிங்கம் இராமேஸ்வரம் வெளி மார்க்கெட்டில் தான் சம்மந்தமான பொருட்கள் வாங்கி சப்ளை செய்து வருகின்றார். இரண்டாவது டெண்டர் பதிவு செய்துள்ள M/S, வால்மாண்ட் ஸ்ட்ரக்சர் பி.லிட், சென்னை. நிறுவனம் தான் உலக தரம் வாய்ந்த நிறுவனம். இவர்களுக்கு உலக நாடுகளில் 64 இடங்களில் சொந்த அலுவலகங்கள் உள்ளது. எலக்ட்ரிக்கல் பொருள்கள் தயார் செய்வதற்கு சென்னையில் தொழிற்சாலை உள்ளது. இந்த கம்பெனியின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. ஆகவே, இந்த நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்த புள்ளியை அனுமதிக்க வேண்டும். என்று விளக்கமளித்தார்.

நகர்மன்ற தலைவர் இந்த டெண்டரை நிராகரித்து விட்டு மறு டெண்டர் நடத்தவேண்டும் என்று கூறினார். நகர்மன்ற தலைவரின் இந்த கருத்துக்கு கவுன்சிலர்களிடையே பெரியளவு எதிர்ப்பு ஏற்ப்பட்டது. நடைபெற்ற டெண்டரை அங்கீகரித்து ஒப்ப்ந்தபுள்ளி பதிவு செய்துள்ள மூன்று நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் யாருக்காவது ஒரு நிறுவனத்திற்கு டெண்டரை உறுதி செய்ய வேண்டும். மறு டெண்டர் நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். டெண்டர் மூலம் வீண் விளம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக்கூடாது என்று பல நகர்மன்ற கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து குறைந்த டெண்டர் பதிவு செய்த மலானி லைட்டிங்க் அன் கோ, திருநெல்வேலி. இந்த நிறுவனத்திற்கு டெண்டரை அங்கீகரித்து நகர்மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  

Thursday 3 May 2012

கீழக்கரை நகர்மன்ற தலைவர் ராவியத்துல் கதரியாவின் கணவர் அமிர் ரிஸ்வான் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை கண்டித்து 10 நகர்மன்ற கவுன்சிலர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்:


கீழக்கரை நகராட்சியில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை / அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதை உடன் நிரப்ப கோரியும் / பல வருடங்கள் தொடர்ச்சியாக கீழக்கரை நகராட்சியில் பணியில் உள்ள பணியாளர்களை பணி இடம் மாற்றம் செய்யக்கோரியும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் நகர்மன்ற தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக உள்ளதாக குற்றசாட்டுகள் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்ற கோரி கீழக்கரை நகர்மன்ற கவுன்சிலர் 10 பேர்கள் 02.05.2012 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய பேரூந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர்.
நகர்மன்ற கவுன்சிலர் அனைவரிடமும் பேட்டி எடுத்த தொலைகாட்சி நிரூபர்கள் செய்திகளை தொலைக்காட்சியில் உடனே செய்தி வெளியிட்டனர். இந்த உண்ணாவிரதம் மூலம் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு சென்றடைந்துள்ளது.
 














இது குறித்து 5வது வார்டு கவுன்சிலர் M. சாகுல் ஹமீது mc அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கவுன்சிலர் பொறுப்புக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் எங்கள் வார்டு மக்களுக்கு எந்த ஒரு பணியும் செய்ய முடியவில்லை. கீழக்கரை நகராட்சியில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் யாரும் இல்லாதது தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். அடுத்த படியாக நகர்மன்ற தலைவரின் கணவர் அமிர் ரிஸ்வான் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் அதிகமாக தலையிடுவதால் அனைத்து நகர்மன்ற கவுன்சிலர்களும் மட்டம் தட்டபடுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக ஒரே ஊரில் பணியில் உள்ள துப்புரவு பணி மேற்பார்வையாளர் V. மனோகரன் எந்த கவுன்சிலரையும் மதிப்பதில்லை. நகர்மன்ற தலைவரின் கணவர் சொன்ன வேலையை மட்டுமே செய்து வருகின்றார். இதனால் கவுன்சிலர்களின் நிலைமை கேள்விக்குரியாக உள்ளது. இதனால் முதல் கட்டமாக இந்த உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளோம்.மேலும், கீழக்கரை நகர்மன்ற நிலைமை மாறவில்லை என்றால் இன்னும் பல போராட்டங்களை நடத்துவோம்.

உண்ணாவிரதம் பற்றி 18 வது வார்டு கவுன்சிலர் M.U.V முகைதீன் இப்ராகிம் அவர்கள் கூறியதாவது:
கீழக்கரை நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும் இந்த நிர்வாக சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நகர்மன்ற தலைவரின் கணவர் அமிர் ரிஸ்வான் கண்டித்தும் இந்த உண்ணாவிரதத்தை 10 கவுன்சிலர்கள் நடத்தியுள்ளோம்.

நகர் நலனை கருத்தில் கொண்டும் கீழக்கரை நகரட்சிக்கு உயர் அதிகாரிகளை உடனே நியமிக்க கோரியும் தொடர்ந்து கீழக்கரை நகராட்சியில் பல வருடங்களாக பணி இடமாற்றம் இல்லாமல் உள்ள பணியாளர்களை இடம் மாற்றம் செய்யக்கோரியும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளோம். மேலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் கீழக்கரை நகராட்சியை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tuesday 24 April 2012

கீழக்கரையின் அவல நிலை 5வது வார்டு கவுன்சிலர் M.சாகுல் ஹமீது குமுறல்:



தற்போது கீழக்கரையில் பெய்த மழையால் கீழக்கரை நகர் முழுவதும் வாருகால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதற்கு காரணம் நகராட்சியின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என அவர் கூறியுள்ளார். இப்புகைப்படத்தில் இருக்கும் பகுதிகளான பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் கடற்கரை பகுதிகளாகும். இதனை நகராட்சி நிர்வாகம் நிவர்த்தி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில்:-
 மக்கள் பணியே மறுமையில் பலன். என தெரிவித்தார்.

Sunday 22 April 2012

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்

 தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கிகரிக்கப்பட்ட பயோனியர் மருத்துவமனை (இராமநாதபுரம்) நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 22.04.2012 காலை 10 மணியளவில் கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் ப்ள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் H. ஹாஜா முகைதீன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

பயோனியர் மருத்துவமனை டாக்டர் திருமதி R.சித்திர ஜோதி MBBS அவர்கள், மருத்துவமனை செயலாளர்கள் S. ஜெயா, R. கற்பக வாணி,  S. ஜனனி , N. உமாதேவி, K. ஹேமபிரியா பயோனீர் மேனேஜர் M.C வைரவ தேவி தகவல் தொடர்பு அதிகாரிகள் S.A முகம்மது மதார் சாகிபு, R.S. நாக குமார் ஆகிய அனைவரும் சிறப்பான மருத்துவ பரிசோதனையை நகர் மக்களுக்கு வழங்கினார்கள்.                                              





தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. R.சுரேஷ் குமார் இலவச மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினார்.
இலவச மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் H. ஹாஜா முகைதீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நகர்மன்ற க்வுன்சிலர்கள் SA. அன்வர் அலி MC, சாகுல் ஹமீது MC, K. செய்யது கருணை MC, மற்றும் MUV முகைதீன் இப்ராகிம் MC ஆகியோர் அவர்களது சிறப்பான சேவையை செய்தனர்.

Monday 9 April 2012

கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு பகுதி சாலை அமைக்கும் பணி நிறைவு பெறுகின்றது:


 2008-2009 ஆம் ஆண்டு டெண்டர் கொடுக்கப்பட்ட உரக்கிடங்கு கீழக்கரை நகராட்சி குப்பைக் கொட்டும் இடம் சுற்றுச் சுவர் கட்டும் பணி மற்றும் ECR சாலை முதல் உரக்கிடங்கு வரை  11/2km தார் சாலை அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது புதிய நகர்மன்ற தேர்வுக்கு பின் திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு
வருகின்றன.





ரூ.53.50லட்சம் செலவில் கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு முதல் ECR  சாலை வரை11/2km நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி இன்று நிறைவு பெறுகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் உரக்கிடங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நிறைவடையும்.

Saturday 24 March 2012

கவுன்சிலர் M.சாகுல் ஹமீது அறிக்கை:

கீழக்கரை ஒரு வார்டு உறுப்பினரை மிகவும் புகழ்ந்து ஒரு இனையதளத்தில் செய்திகள் வருகின்றது. இவர் ஒருவர் தான் மக்களுக்கு சேவை செய்கின்றாராம். மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் படுத்து தூங்குகின்றார்களாம். கடற்கரையில் மண்டிக்கிடக்கும் குப்பைகளை தனது கேமரா மூலம் படம் பிடித்து தினகரன் நிரூபர் வெளியிட்டு இருக்கின்றார். தற்போதைய கீழக்கரை கடற்கரை நிலவரம் அனைவரும் அறிந்ததே.உண்மையான  செய்திகளை பத்திரிக்கை வாயிலாக வெளியிடுவதால் கீழக்கரை நகருக்கு பல நன்மைகள் நடந்து வருவதை அனைவரும் அறிந்ததே. சில முட்டாள் கவுன்சிலர்களுக்கு இது தெரியாதா? அது சரி போதையில் தென்னந்தோப்பில் படுத்து கிடக்கும் இவர்களுக்கு ஊருக்குள் நடப்பது எப்படி தெரியும்? இவ்வாறு 5-வது வார்டு கவுன்சிலர் ஜனாப்.M. சாகுல்ஹமீது அவர்கள் கூறினார்.